மாதாந்திர பராமரிப்பு உதவிதொகை ரூ.2000 பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் சமர்ப்பிக்க வேண்டும்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை ரூ.2000 பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவி தொகை ரூ.2000 பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் அட்டை அவசியம் பெற்றிருக்க வேண்டும். சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் ரூ.2000 மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை மனவளர்ச்சி குன்றியோ, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவி தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் அட்டையினை, அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட இந்த அலுவலகத்தின் மூலம் பராமரிப்பு உதவித்தொகை பெறும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் வருகிற 23ம் தேதிக்குள் தங்களின் ஆவணங்களான மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு எண், யுடிஐடி அட்டை, மருத்துவச் சான்று மற்றும் மாற்றுத்திறனாளி நபரின் புகைப்படம்-1 ஆகிய நகல்களுடன் சிறப்பு பள்ளிகளில் வழங்க வேண்டும். திருவொற்றியூர் மண்டலத்தில் வார்டு எண் 1 முதல் 14 வரை அன்பாலயா சிறப்புப்பள்ளி எண்.67/4/6, கிராமம் தெரு, திருவொற்றியூர், தொலைபேசி எண். 8939674767. மணலி, மண்டலத்தில் வார்டு எண் 15 முதல் 21 வரை ஆப்பர்சூனிட்டி சிறப்புப்பள்ளி எண்.18/3, புதிய காலனி பிரதான தெரு, பழைய நாப்பாளையம், மணலி புதுநகர், தொலைபேசி எண். 9447857285.  மாதவரம் மண்டலத்தில் வார்டு எண் 22 முதல் 33 வரை மைத்ரி சிறப்புப்பள்ளி, எண்.98, கிருஷ்ணதாஸ் ரோடு, மங்களாபுரம், பெரம்பூர், தொலைபேசி எண். 9080183069. தண்டையார்பேட்டை மண்டலத்தில் வார்டு எண் 34 முதல் 48 வரை அவ்வை காப்பகம் சிறப்புப்பள்ளி, எண். 77/பி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை-81, தொலைபேசி எண். 7395949500. ராயபுரம் மண்டலத்தில் வார்டு எண் 49 முதல் 63 வரை ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு, எண்.34, வீராகுட்டிதெரு, பழைய வண்ணாரப்பேட்டை, தொலைபேசி எண். 8778684301. திரு.வி.க.நகர் மண்டலத்தில் வார்டு எண் 64 முதல் 78 வரை சி.எஸ்.ஐ. புத்துயிர் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப்பள்ளி, எண். 64, ராகவன் தெரு, பெரம்பூர், தொலைபேசி எண். 9962625019. அம்பத்தூர் மண்டலத்தில் வார்டு எண் 79 முதல் 93 வரை வசந்தம் சிறப்புப்பள்ளி, கிழக்கு முகப்பேர், (இபி ஆபீஸ் அருகில்), தொலைபேசி எண். 044-26560662. அண்ணாநகர் மண்டலத்தில் வார்டு எண் 94 முதல் 108 வரை  விஸ்டம் லேனிங் சென்டர் புதிய எண்.195, 6வது அவென்யூ அண்ணாநகர் மேற்கு, தொலைபேசி எண். 9626160647. தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு எண் 109 முதல் 126 வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, தொலைபேசி எண். 044- 24714758. கோடம்பாக்கம் மண்டலத்தில் வார்டு எண் 127 முதல் 142 வரை மாநில வள பயிற்சிமையம், பெரிபேரியல் ஆஸ்பிட்டல் கேம்பஸ், இஎஸ்ஐ அருகில், கே.கே.நகர், தொலைபேசி எண். 18004250111, 8838579292. வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு எண் 143 முதல் 155 வரை விஜய் ஹீயூமன் சர்வீஸ், எம்.ஜி.ஆர். ஜானகிமெட்ரிகுலேஷன் பள்ளி, சத்தியா கார்டன், பி.வி. ராஜாமன்னார் சாலை, கே.கே.நகர், தொலைபேசி எண். 18004250111, 7358583809. ஆலந்தூர் மண்டலத்தில் வார்டு எண் 156 முதல் 167 வரை மாநில வள பயிற்சி மையம், பெரிபேரியல் ஆஸ்பிட்டல் கேம்பஸ், இஎஸ் அருகில், கே.கே.நகர், தொலைபேசி எண். 18004250111, 7358583809. அடையாறு மண்டலத்தில்  வார்டு எண் 170 முதல் 182 வரை செயின்ட் லூயிஸ் காதுகேளாதோர் மற்றும் பார்வைதிறன் குறைபாடுடையோர் சிறப்புப்பள்ளி கெனால் பேங்க் ரோடு, பழைய கேன்சர் மருத்துவமனை அருகில்  காந்திநகர், அடையாறு, தொலைபேசி எண். 9444851437. பெருங்குடி மண்டலத்தில் வார்டு எண் 168, 169, 183-191 வரை ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு, தரமணிசாலை, சென்னை- 113, தொலைபேசி எண்.8122879150. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் வார்டு எண் 192 முதல் 200 வரை பாத்வே சிறப்புப்பள்ளி, எண். இ76/1, 12வது மேற்கு தெரு, காமராஜர்நகர், திருவான்மியூர், தொலைபேசி எண். 9840792687 ஆகிய சிறப்பு பள்ளிகளில் நகல்களுடன் வழங்க வேண்டும். எனவே, ரூ.2000 உதவி தொகையை தொடர்ந்து பெறும் பொருட்டு இந்த இடங்களில் சான்றுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை