மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு ஜிப்மர் மருத்துவக்குழு அறிக்கை நகல் பெற்றோருக்கு வழங்க நீதிபதி உத்தரவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதி விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து பள்ளி தாளாளர், செயலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2 முறை நடந்த மாணவி ஸ்ரீமதியின் உடற்கூறு அறிக்கைகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து, ஆய்வறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் நேற்று முன்தினம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த ஆய்வறிக்கையின் நகலை கேட்டு மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சார்பில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, ஜிப்மர் மருத்துவ குழு தாக்கல் செய்த அறிக்கை நகலை 24ம் தேதி (இன்று) பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளார்….

Related posts

இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய திட்டத்தின் கீழ் வீடு பெற ஆதார் எண் கட்டாயம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை; கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு!