மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

சேந்தமங்கலம், மார்ச் 19: சேந்தமங்கலம் வட்டாரத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், உதவி கலெக்டர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். சேந்தமங்கலம் ஒன்றியம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி திருமலைகிரி அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார கல்வி அலுவலர் அருள் புனிதன் தலைமை வகித்தார் பேரூராட்சி தலைவர் பாப்பு முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சித்ரா வரவேற்று பேசினார். மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட உதவி கலெக்டர் பிரபாகரன் கலந்து கொண்டு, மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். ஊர்வலத்தில் மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு பதாகையை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். அரசு பள்ளியில் வழங்கும் காலை உணவு, மதிய உணவு, இலவச முட்டை, சீருடை, சைக்கிள் உள்ளிட்ட சலுகைகள் குறித்து விளக்கி கூறி, துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர் கோகிலா, இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதி மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள், பள்ளியின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை