மாணவர்கள் விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம்

தூத்–துக்–குடி, மே 17: மாண–வர்–கள் விடா–மு–யற்–சி–யு–டன் தொடர்ந்து உழைத்–தால் வெற்றி நிச்–ச–யம் என்று கலெக்–டர் செந்–தில்–ராஜ் பேசி–னார். தூத்–துக்–குடி மாவட்–டத்–தில் உள்ள 56 அரசு மற்–றும் அரசு உத–வி–பெ–றும் மேல்–நி–லைப் பள்–ளி–க–ளில் பிளஸ்2 பொதுத்–தேர்–வில் முதல் 3 இடங்–களை பெற்ற மாண–வர்–களுக்கு உயர்–கல்வி குறித்த விழிப்–பு–ணர்வு நிகழ்ச்–சி–யான நான் முதல்–வன்-கல்–லூரி கனவு நிகழ்ச்சி நடந்–தது. மாவட்ட கலெக்–டர் செந்–தில்–ராஜ் தலைமை வகித்து பேசி–ய–தா–வது: பள்–ளிக்–கல்–விக்கு பிறகு மாண–வர்–கள் அனை–வ–ரும் அர்த்–த–முள்ள உயர் கல்வி படிப்–பு–களை தொட–ரச் செய்–வதே நான் முதல்–வன் திட்–டத்–தின் நோக்–கம். தமிழ்–நாட்–டின் உயர்–கல்வி விகி–தத்தை 51 சத–வீ–தத்–தில் இருந்து அடுத்த 3 ஆண்–டு–க–ளில் 100 சத–வீ–த–மாக உயர்த்–தவே தமிழ்–நாடு முதல்–வர் இத்–திட்–டத்தை அறி–மு–கப்–ப–டுத்தி உள்–ளார். இன்–றுள்ள வேலை–வாய்ப்–பு–க–ளில் 90 சத–வீ–தம் 2040ல் மாறி–யி–ருக்–கும். எனவே மாண–வர்–கள் புதுப்–புது படிப்–பு–களை படிக்க வேண்–டும். எந்த படிப்பு படித்–தா–லும் அதில் ஆர்–வத்–து–டன் படிக்க வேண்–டும். கல்–லூரி மாண–வர்–கள் புத்–த–கங்–கள் மட்–டு–மல்–லாது நாளி–தழ்–க–ளை–யும் தின–மும் படிக்க வேண்–டும். பெரிய லட்–சி–யங்–களை வைத்–துக்–கொள்ள வேண்–டும்.

நீங்–கள் என்–ன–வாக வேண்–டும் என்று நினைக்–கி–றீர்–களோ, அதை நோக்கி பய–ணம் செய்ய வேண்–டும். பிறக்–கும்–போது அனை–வ–ரும் அறி–வா–ளி–க–ளாக பிறக்–க–வில்லை. தொடர்ந்து பயிற்சி செய்–து–கொண்டே இருக்க வேண்–டும். எந்த கல்–லூ–ரி–யில் இடம் கிடைக்–கி–ற–தோ? அதில் சேர்ந்து சிறப்–பாக படிக்க வேண்–டும். கல்–லூரி படிப்பு முடித்து அர–சி–யல்–வா–தி–யா–கவோ, தொழில் முனை–வோ–ரா–கவோ, வெளி–நாட்–டிலோ வேலை செய்–ய–லாம். பட்–டப்–ப–டிப்–பு–டன் சேர்த்து ஸ்போக்–கன் இங்–கி–லீஷ் உள்–ளிட்ட இதர திற–மை–க–ளை–யும் வளர்த்–துக் கொள்ள வேண்–டும். மாண–வர்–கள் விடா–மு–யற்–சி–யு–டன் தொடர்ந்து உழைத்–தால் வெற்றி நிச்–ச–யம். இவ்–வாறு பேசி–னார்.போலீஸ் எஸ்பி பாலாஜி சர–வ–ணன் முன்–னிலை வகித்து பேசி–ய–தா–வது: மாண–வர்–கள் தன்–னம்–பிக்–கை–யு–டன் முன்–னேற வேண்–டும் என்–ப–தற்–காக நான் முதல்–வன் திட்–டம் உரு–வாக்–கப்–பட்டு உள்–ளது. ஆங்–காங்கே கிடைக்–கும் சிறு, சிறு ஆலோ–ச–னை–கள் வாழ்க்–கை–யில் படிக்–கட்–டு–க–ளாக இருக்–கும். உங்–க–ளது எண்–ணங்–களுக்கு எது உகந்–ததோ அதை முடிவு செய்து கொள்ள வேண்–டும்.

நமது முன்–னேற்–றத்–துக்கு தடை பொரு–ளா–தார கார–ணி–களோ, பெற்–றோரோ, உற–வி–னர்–களோ கிடை–யாது. ஒவ்–வொ–ரு–வ–ரா–லும் முன்–னேற முடி–யும். உங்–களுக்கு தேவை தன்–னம்–பிக்கை. யுபி–எஸ்சி, டிஎன்–பி–எஸ்சி, ரயில்வே உள்–ளிட்ட நிறைய போட்–டித் தேர்–வு–கள் உள்–ளன. அள–வில்–லாத படிப்–பும், சேவை–யும்–தான் உங்–களை வாழ்க்–கை–யில் முன்–னேற்–றும். வாழ்க்–கை–யில் மற்–ற–வர்–களை புண்–ப–டுத்–தக்–கூ–டாது. ஒவ்–வொ–ரு–வ–ரும் நான் முதல்–வ–னாக இருக்க வேண்–டும். வெற்–றி–யா–ளர்–க–ளாக வர வேண்–டும், என்–றார். நிகழ்ச்–சி–யில் தூத்–துக்–குடி மாந–க–ராட்சி ஆணை–யர் தினேஷ் குமார், அரசு மருத்–து–வக்–கல்–லூரி மருத்–து–வ–மனை முதல்–வர் சிவ–கு–மார், வேளாண்மை கல்–லூரி முதல்–வர் தேர–டி–மணி, பல்–கலை. வஉசி பொறி–யி–யல் கல்–லூரி முதல்–வர் பீட்–டர் தேவ–தாஸ் மற்–றும் தலைமை ஆசி–ரி–யர்–கள், ஆசி–ரி–யர்–கள், மாணவ- மாண–வி–கள் கலந்து கொண்–ட–னர்.

 

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு