மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூலை 5: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் (ஏஐஎஸ்எப்), மாநிலம் முழுவதும் அரசு கலைக்கல்லூரிகள் முன்பு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். சேலம் அரசு கலைக்கல்லூரி முன்பு மதியம், மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டக்குழு உறுப்பினர் மணிபாரதி தலைமை வகித்தார். மாநில செயலாளர் தினேஷ், மாவட்ட செயலாளர் நேதாஜி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில், வகுப்புகளை புறக்கணித்து வந்த மாணவர்கள், பங்கேற்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை