ராசிபுரம், ஜன.9: ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், வர்த்தக அணி சிவகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் அருள்அரசன், ஒன்றிய பொருளாளர் முத்துச்செல்வன், பள்ளியின் பெற்றோர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.