மாணவர்களின் அரியர் தேர்வு குளறுபடிகள் குறித்து உரிய நடவடிக்கை: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: கல்லூரி மாணவர்களின் பருவத் தேர்வுகள், அரியர் தேர்வுகளில் நடந்த குளறுபடிகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது புதியதாக அமைந்துள்ள அரசின் உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, உயர் கல்வித்துறையின் சார்பில் நேற்று ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார். அதில் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு, அமைச்சர் பொன்முடி கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் தற்போது வரை ஆன்லைன் மூலம் நடந்தது. ஆனால், இந்த ஆண்டில் தேர்தலுக்கு முன்பு வெளியான தேர்வு முடிவுகளில் நிறைய குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு புகார்கள் வந்தன. அது குறித்து துணைவேந்தர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஆலோசித்தோம். இதற்கு பிறகு மாணவர்களிடமும் கருத்து கேட்கப்படும். இதன் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவுகள் அறிவிப்பார் என்றார்….

Related posts

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு: டிசம்பர் 31ம் தேதி வரை பராமரிப்பு மற்றும் கண்காணிக்க திட்டம்

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் – திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்: டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலத்தை கடித்து குதறிய தெருநாய்கள்