மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடை கோரி வழக்கு..: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…!

சென்னை : மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதை அனுமதிக்கும் மிருகவதை தடைச் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாடுகளை கட்டுப்படுத்த அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து வந்த நிலையில், மூக்கணாங்கயிறு போடப்படுவதால் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகவும் அதற்கு அனுமதிக்கும் மிருகவதை தடைச் சட்டப்பிரிவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், உலகளவில் மாடுகளை கட்டுப்படுத்த இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுவதாகவும் இது தொடர்பாக புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்ற செய்வோம் என்றும் தெரிவித்தனர்.அத்துடன் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு