மாஜி மின்வாரிய ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை ஆரணி குற்றவியில் நீதிமன்றத்தில் தீர்ப்பு ₹6 லட்சம் செக் மோசடி வழக்கில்

 

ஆரணி, செப்.11: ஆரணியில் ₹6 லட்சம் செக் மோசடி வழக்கில் மாஜி மின்வாரிய ஊழியருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் சைதப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரவேல்(65), பட்டு விற்பனையாளர். அதே பகுதியை சேர்ந்தவர் விஜயகிருஷ்ணன்(62), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு சுந்தரவேலுவிடம் ₹6 லட்சம் கடனாக விஜயகிருஷ்ணன் வாங்கியுள்ளார். மேலும், அந்த பணத்தை திருப்பி தருமாறு சுந்தரவேல் பலமுறை கேட்டு வந்துள்ளார். அதற்கு விஜய கிருஷ்ணன் பணத்தை திருப்பி தராமல், 2 காசோலைகள் கொடுத்து கால அவகாசம் கேட்டு வந்துள்ளார். ஆனால், அதன் பின்னர் விஜயகிருஷ்ணன் பணத்தை திருப்பி தராமல் பல்வேறு காரணங்களை கூறி சுந்தரவேலுவை அலைக்கழித்து ஏமாற்றி வந்துள்ளார்.

இதனால், விஜயகிருஷ்ணன் கொடுத்த காசோலையை சுந்தரவேல் வங்கியில் செலுத்தியுள்ளார். அப்போது, வங்கி கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திரும்பி வந்துள்ளது. இதனால், கடந்த 2016ம் ஆண்டு விஜயகிருஷ்ணன் கொடுத்த காசோலையை வைத்து, சுந்தரவேல் ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் நேற்று விவசாரனைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் கார்த்திகேயேன் செக்மோசடி செய்த குற்றத்திற்காக விஜயகிருஷ்ணனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ₹6 லட்சம் மோசடி செய்த பணத்திற்கு நஷ்ட ஈடாக ₹10 லட்சம் திருப்பி செலுத்த வேண்டும். தவறினால், மேலும், 3 மாதம் கடுங்காவல் தண்டனை நீட்டிக்கப்படும் என தீர்ப்பாளித்தார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது