மாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில்  பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது.  திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில், ஆழ்வார்களால் மங்களாசாசனம்  செய்யப்பட்ட 108 திவ்வியதேசங்களில் ஒன்றாக திருப்புட்குழி விஜயராகவ பெருமாள்  கோயில் விளங்குகிறது. இங்கு, கடந்த 7ம் தேதி, கொடியேற்றத்துடன்  பிரம்மோற்சவம் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை  வேளைகளில் பெருமாள் சிம்ம வாகனம், கருடசேவை, சேஷ வாகனம், நாச்சியார்  திருக்கோலம், சந்திரபிரபை, யாழி வாகனங்களில் வீதியுலா வந்து அருள்பாலித்து  வந்தார். விழாவின் 7ம் நாளான நேற்று காலை விஜயராகவப் பெருமாள் திருத்தேரில்  எழுந்தருளி வீதியலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் திருப்புட்குழி, பாலுசெட்டிசத்திரம், தாமல் முசரவாக்கம், முட்டவாக்கம்,  சிறுணை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் குமரன், கோயில்  நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்தனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை