மாங்கனி மாவட்டத்தில் தான் இந்த கூத்து சவால்விட்ட பெண் எம்எல்ஏவை கண்ணீருடன் ஓடவிட்ட விவிஐபி!

மாங்கனி மாவட்டத்தில் வீரமான பாண்டி தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக புதியவரை முதல்வர் இபிஎஸ் களம் இறக்கிவிட்டுருக்காரு. அந்த வேட்பாளரும், மரியாதை நிமித்தமாக தனக்கு முழு ஆதரவு அளித்து வெற்றி  பெறச் செய்ய வேண்டி, சிட்டிங் அதிமுக பெண் எம்எல்ஏவை போய் பார்த்தார். ஆனா அவர், எனக்கு சீட் இல்லை, உனக்கெல்லாம் எப்படி சீட் கொடுத்தாங்கனு கேள்வி கேட்டு, இனி இந்த பக்கம் வந்து விடாதே, நீ எப்படி ஜெயிக்கிறனு பாப்போம்னு சவால் விட்டு விரட்டி அடித்தாராம். இந்த தகவல் அதிமுக நிர்வாகிகளிடையே தீயாய் பரவியதாம். சேலம் விவிஐபி கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதாம். நடந்த சம்பவத்தை புதிய வேட்பாளரிடம் கேட்டுக் கொண்ட அவர், தன்னை வந்து பெண் எம்எல்ஏவை பார்க்க உத்தரவு போட்டாராம். அந்த உத்தரவின்பேரில், கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, முதல்வர் இபிஎஸ்சை பார்க்க பெண் எம்எல்ஏ வந்தார். ஆனால், முதல்வரோ கண்டு கொள்ளவே இல்லையாம். உடனே நான் அப்படி செய்திருக்கக் கூடாதுனு அங்கிருந்த மற்ற எம்எல்ஏக்களிடம் சொல்லி பெண் எம்எல்ஏ புலம்பினாராம். அவங்களும், நாங்க பார்த்துக்கிறோம், அண்ணன்கிட்ட எடுத்துச் சொல்றோமுனு மனதை தேற்றினார்களாம். இருந்தாலும், கடைசி வரை முதல்வர் கண்டுகொள்ளாததால், ஒருக்கட்டத்தில் அவரின் அறைக்குள் பெண் எம்எல்ஏ சென்றார். ஆனால், அடுத்த சில நொடிகளில் அங்கிருந்த முதல்வர் வெளியே வந்துவிட்டார். பிறகு கண்ணீர் சிந்தியபடி எம்எல்ஏ வெளியே புறப்பட்டுச் சென்றார். இதை பார்த்த கட்சிகாரங்க, இப்படி ஆகிப்போச்சேனு ரொம்பவும் பீல் பண்ணுனாங்களாம்….

Related posts

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா