மாங்கனி மாவட்டத்தில் அதிகம் வரும் ‘ராங்கால்’ ரகசியம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘பவர்ல இருந்தபோது ேகாட்டைவிட்டுவிட்டு, இப்ேபாது தனக்காக அணி சேர்க்கும் நபர் யாராம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியின்  பொதுச் செயலாளர் பதவியை பிடிக்கும் ரேசில் சேலம்காரர் வின்னராகிவிட்டார். ஆனால், தேனிகாரர் தன் பழைய பாசத்தை எல்லாம் காட்டி இப்போது தான் தனக்கு என்று ஒரு அணியை திரட்ட ஆரம்பித்துள்ளாராம். ஆனால், ஆட்சியில இருக்கும்போதே  கட்சியை கைப்பற்றியே  ஆகணுங்குற திட்டத்தோட சேலம்காரர் காய்களை நகர்த்தி ஜெயித்தும்விட்டார். துணையாக பதவியில் இருந்தபோது யாருக்கும் எதுவும் செய்யாமல் கடமையே கண்ணாக இருந்தாராம் தேனிக்காரர். தேனிக்காரர் மெரினா பீச்சில உட்கார்ந்து போராட்டம் நடத்தியபோது, அவர் பின்னாடி பெரிய தொண்டர் கூட்டமே இருந்ததாம்.  அதை அப்படியே தக்க வைக்க தெரியாம பதவிக்காக கோட்டை விட்டார்னு அவருடைய ஆதரவாளர்களே சிலர் இப்போதும் பேசிக்கிறாங்க. ஆனால், அவங்கள பெரிய கூட்டமே இப்போது சேலம் முகாம்ல இருக்காங்க. இனியும் தாமதித்தால் தன் பின்னால் தன் மகன்களை தவிர தொண்டர்கள்னு யாரும் இருக்க மாட்டாங்க. டெல்லியும் தன்னை மதிக்காது. இதனால, தனக்கு என்று ஒரு கோஷ்டியை சேர்த்தே ஆக வேண்டும் என்று முடிவில் உறுதியாக இருக்காராம். அதற்கு அவருடைய மகன்களும் துணையாக இருக்காங்க. அந்த தைரியத்துல மாங்கனி மாநகருல ஆட்களை பிடிக்கும்  வேட்டை அதிதீவிரமாக நடந்துக்கிட்டிருக்காம். தேனிக்காரரின் உதவியாளருன்னு  மாங்கனி மாநகரின் மாஜிக்களுக்கு தொடர்ந்து செல்போன் அழைப்பு வருதாம்.  ‘‘ஹலோ…ஐயாவோட பிஏ பேசுறேன்னு’’  வாய்ஸ் வந்ததும் ராங் கால்னு  சொல்லிக்கிட்டு போனை வச்சிருதாங்களாம். ஏற்கனவே நம்பி போய் நட்டாத்துல  நிக்கிறோம். இன்னும் கரையேற முடியல. உங்கள நம்பி வந்தா மீண்டும் பின்வாங்க  மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்… 2வது ரவுண்டு கிணத்துக்குள்ள தள்ளிவிட  பார்க்கிறாங்க என்று புலம்புகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சந்துல சிந்து பாடும் இலைக்கட்சி எம்எல்ஏவை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில் இலைக்கட்சி ஆட்சியின்போது, டாஸ்மாக் “பார்’களில் விதிமீறி சரக்கு  விற்க அனுமதி அளிக்கப்பட்டது. இதன்மூலம், பல கோடி ரூபாய் மாமூல் குவிந்தது.  கோவை மாவட்டத்திலும் வசூல் உச்சத்தில் இருந்தது. இப்பொறுப்பை, `அம்மன்’  பெயரை அடைமொழியாக கொண்ட ஒரு இலைக்கட்சி எம்எல்ஏ கவனித்து வந்தார். மாவட்டம்  முழுவதும் உள்ள `பார்’களில் வசூல் எடுப்பது இவரது வேலைதான். வசூல் பணத்தில் ஒரு பகுதியை அமுக்கிவிட்டுதான், மீதி பணத்தை  மேலிடத்துக்கு கொடுப்பாராம். அப்படி, அமுக்கிய பணத்தின் மூலம், இன்று பல  கோடி ரூபாய்க்கு கோவையில் பங்களா கட்டி உள்ளாராம். இவர், எம்எல்ஏ ஆவதற்கு  முன்பு சாதாரண வீட்டில் இருந்தாராம். இன்று அதன் அருகில் மாபெரும்  பங்களா உருவாகியுள்ளது. இவர் தன் சொகுசு கார்களை நிறுத்தவே அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் கட்டி உள்ளாராம். தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பிறகு டாஸ்மாக் பார் விதிமீறல்கள்  படிப்படியாக தடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இவர் பழைய நினைப்பில் சில  `பார்’களுக்கு சென்று, மீண்டும் வசூல் வேட்டையில் இறங்கி உள்ளாராம். இவரை பார்த்த டாஸ்மாக் ஊழியர்கள் “அண்ணே, இப்போ  ஒன்னும் பருப்பு வேகாது. ஒருவேளை ஆட்சி மாறிச்சுன்னா, ஐந்து வருஷம்  கழிச்சு, அப்புறமா வாங்க. பார்த்துக்கலாம்…’’ சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மோசடி நிறுவனத்தோடு தொடர்புல இருந்த காக்கி இப்போது நடுங்குறாராமே, அப்படியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டத்துல ரயில் நின்று போகும் காட்டுப்பாடியில ஆனந்தமான 3 ஸ்டார் காக்கி பணிபுரிஞ்சு வந்தாரு. இவரு காட்டுப்பாடியில இயங்கி வந்த தனியார் நிதி நிறுவனத்தோட தொடர்புல இருந்துகிட்டு, அவங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுது. அதோட, அந்த நிதி நிறுவனத்துலயும் பல லட்சங்களை இன்வெஸ்ட் செஞ்சிருக்குறதாக பேச்சு அடிபட்டுச்சு. இந்த தகவல், மாவட்ட உச்ச காக்கிக்கும், அவங்களுக்கு உயர் காக்கியாக உள்ளவருக்கும் பெட்டிஷன்கள் போயிருக்குது. அதன்பேர்ல நடத்திய விசாரணையில, நிதி நிறுவனம், மணல் கடத்தலுக்கு உதவியது தெரியவந்திருக்குது. இதையடுத்து ஆனந்தமானவரை வெயிட்டிங் லிஸ்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்காங்க.அதோட, வெயிலூர் மாவட்டத்துல இருக்குற பள்ளிகொண்ட காவல்நிலையத்துல பணம் வைத்திருக்கும் பெண் கடவுள் பெயரை கொண்ட 3 ஸ்டார் காக்கி பணியாற்றி வந்தாங்க. இவங்க காக்கிகள் நண்பர் குழு கலைக்கப்பட்ட பிறகும், 5 பேரை காக்கிகள் நண்பர்கள் குழுவாக வெச்சிகிட்டு பணியாற்றி வந்தாங்களாம். இவங்க மூலமாக மணல், குட்கா மாபியாக்கள்கிட்ட சம்திங் பெற்று செழிப்பாக இருந்திருக்காங்களாம். இந்த புகார் உயர் காக்கிகளுக்கு போகவே, உடனே அந்த 3 ஸ்டார் பெண்காக்கியும் ஏஆர்க்கு தூக்கியடிச்சுட்டாங்களாம். அதோட அந்த காவல்நிலையத்துல சம்திங் மேட்டர்ல யாருக்கும் தொடர்பு இருக்குதான்னு விசாரணை நடக்குதாம்…’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

சின்ன மம்மி உத்தரவால் கொதித்துப்போன சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா