மஹாராஷ்டிராவில் சட்டப்பேரவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்ட 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்!: சபாநாயகர் அதிரடி

மும்பை: மஹாராஷ்டிராவில் பாரதிய ஜனதாவின் 12 எம்.எல்.ஏக்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யபட்டிருக்கின்றனர். இடைக்கால சபாநாயகரான பாஸ்கர் ஜாதவை எதிர்த்து கடும் அமளியில் ஈடுபட்டதாகவும், தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காகவும் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மஹாராஷ்டிரா சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. மஹாராஷ்டிரா சட்டமன்றத்தில் தற்போது சபாநாயகர் இல்லை. சபாநாயகர் பதவியில் இருந்த பட்டோலி ராஜினாமா செய்ததால் இடைக்கால சபாநாயகராக பாஸ்கர் ஜாதவ் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சட்டசபையின் இடைக்கால சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் அலுவலகத்தித்திற்கு வந்து 12 பாஜக எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேலும் அந்த சமயத்தில் அமளியில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பராக் அலவானி, ராம் சத்புட், சஞ்சய் குட், ஆஷிஷ் ஷெலார், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல் பட்கல்கர், ஷிரிஷ் பிம்பிள், ஜெய்குமார் ராவல், யோகேஷ் சாகர், நாராயண் குச்சே, மற்றும் கீர்த்திகுமார் பகடி ஆகிய 12 பேரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். ஏற்கனவே அரசுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்திலும் நிதி பற்றாக்குறை இருக்கும் சூழ்நிலையில் 155 கோடி ரூபாய் விளம்பரத்துக்கு மட்டும் செலவிட்டுருப்பதாக குற்றம்சாட்டி பாரதிய ஜனதா கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இத்தகைய சூழலில் தற்போது 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து,  மஹாராஷ்டிராவில் 12 பாஜக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏக்கள் கண்ணிய குறைவாக நடந்து கொண்டார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டில் சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்….

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்