Monday, July 8, 2024
Home » மழை வெள்ள பாதிப்பு காரணமாக அதிவேக விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மழை வெள்ள பாதிப்பு காரணமாக அதிவேக விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

by kannappan

சென்னை: மழை வெள்ள பாதிப்பு காரணமாக அதிவேக விரைவு ரயில்கள் நேற்றும், இன்றும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  ஜோத்பூர்-சென்னை இடையே நாளை  11.55 மணிக்கு இயக்கப்படும் (22664) அதிவிரைவு ரயில் ரத்து  செய்யப்படுகிறது. அதைப்போன்று நாகர்கோவில்-சாலிமார் இடையே இன்று பிற்பகல்  2.45 மணிக்கு இயக்கப்படும் (12659) வாராந்திர அதிவேக விரைவு ரயில், சென்னை-  விஜயவாடா இடையே இன்று பிற்பகல் 2.10 மணிக்கு இயக்கப்படும் (12712)  பினாங்கினி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை- ஐதராபாத் இடையே இன்று மாலை 4.45  மணிக்கு இயக்கப்படும் (12603) டெக்கான் எக்ஸ்பிரஸ், சென்னை-  ஜெய்ப்பூர் இடையே இன்று மாலை 5.40 மணிக்கு இயக்கப்படும் (12967) அதிவேக விரைவு  ரயில், சென்ன- டெல்லி இடையே இன்று 6.50 மணிக்கு இயக்கப்படும் (12615) அதிவேக விரைவு  ரயில், தாம்பரம்- ஐதராபாத் இடையே இன்று மாலை 5 மணிக்கு  இயக்கப்படும் (12759) சார்மினா அதிவேக விரைவு, ரயில் செங்கல்பட்டு- காக்கிநாடா   இடையே இன்று மாலை 4 மணிக்கு இயக்கப்படும் (17643) போர்ட் அதிவேக விரைவு ரயில்,  திருவனந்தபுரம்- டெல்லி கேரளா இடையே இன்று பிற்பகல் 12.20 மணிக்கு  இயக்கப்படும் (12625) அதிவேக விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.  மேலும் செங்கல்பட்டு-கச்சிகுடா இடையே நேற்று பிற்பகல் 3.35 மணிக்கு இயக்கப்படும் (17651) அதிவேக விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது. அதைப்போன்று சென்னை- நிஜாமுதீன் இடையே காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் (12269) ட்ராண்டோ அதிவேக விரைவு ரயில், சென்னை- ஹவுரா இடையே காலை 7 மணிக்கு இயக்கப்படும் (12842) கோரமண்டல் அதிவேக விரைவு ரயில், சென்னை- விஜயவாடா இடையே காலை 7.25 மணிக்கு இயக்கப்படும் (12077) சதாப்தி அதிவேக விரைவு ரயில், சென்னை- அகமதாபாத் இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் (12656) நவாஜூவன் அதிவேக விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

five − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi