மழையால் பற்சக்கரங்கள் இயங்காததால் குன்னூருக்கு 1 மணி நேரம் தாமதமாக வந்த மலை ரயில்

குன்னூர்: மழை காரணமாக மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் பற்சக்கரங்கள் சரியாக இயங்காததால் 1 மணி நேரம் தாமதமாக குன்னூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உலகம் முழுவதும் இருந்து வந்து செல்கின்றனர். மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்படும் இந்த மலை ரயில், பல்வேறு மலை குகைகள் வழியே பயணம் செய்கிறது. மலை பாதையில் உள்ள இயற்கை வளங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு 10 மணிக்கு குன்னூருக்கு வரவேண்டிய மலை ரயில், மழை காரணமாக பற்சக்கரங்கள் சரியாக இயங்காததால் சுமார் 1 மணி நேரம் தாமதாமாக 11 மணிக்கு வந்தடைந்தது….

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்