மழையால் சேதமடைந்த தக்காளி தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு

உடுமலை : உடுமலை  அருகே உள்ள குமரலிங்கம் பகுதியில், விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ளனர்.  தக்காளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த  கனமழை காரணமாக தக்காளி செடிகள் சாய்ந்தன. இதில், 30 ஏக்கரில் தக்காளி  பழங்கள் அழுகிவிட்டதாகவும், இதனால் நஷ்ட்ம ஏற்பட்டுள்ளதால் அரசு நிவாரணம்  வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.இதுபற்றிய செய்தி நேற்று முன்தினம் (6ம் தேதி) தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியாகி இருந்தது.இதைத்தொடர்ந்து,  மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் திவ்யா, உதவி  தோட்டக்கலை அலுவலர் பிரபாகரன் ஆகியோர், பாதிக்கப்பட்ட மயிலாத்தாள் என்பவரது  தோட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். சேதம் குறித்து விவசாயிடம் விசாரித்த  அதிகாரி, இதுபற்றி முன்கூட்டியே மணியகாரரிடம் தெரிவிக்க வேண்டும் என  அறிவுறுத்தினார்.பின்னர், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பிய  அறிக்கையில், 6 மாதங்கள் ஆன தக்காளி செடிகள் கடைசிகட்ட அறுவடை நிலையில்  இருந்ததாகவும், தோட்டத்தில் மழைநீர் தேக்கமோ, பயிர் சேதமோ காணப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிருப்தி  அடைந்துள்ளனர்….

Related posts

மெரினாவில் வெப்பம் அதிகமாக இருக்கும்: எல்.முருகன் பேட்டி

சென்னையில் விமான சாகச நிகழ்ச்சியை காணச் சென்ற 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உரிய விளக்கத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவு

விமான சாகச நிகழ்ச்சி; வெயில் தாக்கத்தால் உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: செல்வப்பெருந்தகை