மழையால் ஓடைகளில் வெள்ளம் சதுரகிரி மலையேற தடை சென்னை பக்தர்கள் ஏமாற்றம்

வத்திராயிருப்பு: மழை காரணமாக சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் சதுரகிரி மலையில் மழை பெய்ததால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல  நேற்று தடை விதிக்கப்பட்டது. சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்களை மலையேற அனுமதிக்கப்படவில்லை. இதனால் தாணிப்பாறையில் வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்…

Related posts

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

சாம்சங் ஊழியர்கள் போராட்டம்: அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்