மழையால் ஏரியில் நீர் மட்டம் உயர்ந்தது

 

ஊட்டி, ஜூலை 22: ஊட்டி ஏரியில் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைகின்றனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள படகு இல்லத்திற்கு சென்று அங்குள்ள ஏரியில் படகு சவாரி மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், பருவ மழை தீவிரமடையாத இருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக ஏரியில் தண்ணீர் அளவு சற்று குறைந்து காணப்பட்டது.கடந்த சில தினங்களாக ஊட்டியில் அவ்வப்போது பெய்து வந்த மழை காரணமாக தற்போது ஏரியில் தண்ணீர் அளவு சற்று உயர்ந்து காணப்படுகிறது. இதனால், இங்கு வந்து படகு சவாரி மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரியில் தண்ணீர் அளவு உயர்ந்துள்ளதால், ஊட்டி ஏரி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை