மழைநீர் தேக்கம், ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மழைநீர், ஆக்கிரமிப்பு குறித்து தற்போது விசாரிக்க முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி நேற்று ஆஜராகி, சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், ஆக்கிரமிப்புகள்தான். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால் நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது. 
மக்கள் மழைநீரில் தவித்து வரும் நிலையில் இந்த விஷயத்தை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார். இதைக்கேட்ட தலைமை நீதிபதி, வெள்ளப் பாதிப்புகளிலிருந்து இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கையை அரசும், சென்னை மாநகராட்சியும் எடுத்து வருகிறது. மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளதால் தற்போது இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கறிஞரின் கோரிக்கையை நிராகரித்தார்.

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்