மழைநீர் கால்வாய் பணிகளால் மின்கம்பிகள் சேதம்: பொதுமக்கள் கடும் அவதி

புழல்: புழல் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மாநகராட்சி, மாதவரம்  மண்டலத்துக்கு உட்பட்ட புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், அண்ணா நகர்,  கதிர்வேடு, கலெக்டர் நகர், சூரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்காக பொக்லைன்  இயந்திரம் மூலமாக பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த பணிகளின்போது, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள உயரழுத்த மின்கம்பிகள் மற்றும் தொலைபேசி  கேபிள்கள் அறுந்து சேதம் அடைகின்றன. இதனால், அப்பகுதிகளில் அடிக்கடி மின் விநியோகம் தடைப்படுகிறது. தொலைபேசிகள் செயல் இழந்து விடுகின்றன. இதன்காரணமாக, அப்பகுதியினர் மின்தடை மற்றும் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படும்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, புழல் பகுதியில் சேதமான மின்கம்பிகளை சீரமைத்து சீரான மின் வினியோகத்தையும், குடிநீர் குழாய்கள் மற்றும் மின்கம்பிகள் சேதமாகாத வகையில் பள்ளம் தோண்டும் பணிகளை மேற்கொள்ள மண்டல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்….

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!