மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்க சென்னையில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், கடந்த 7ம் தேதி சென்னை மாநகராட்சி  அலுவலகத்தில் நடைபெற்ற பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், பொது சுகாதாரத்துறையின் சார்பில் பருவமழை காலத்தை முன்னிட்டு  ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்களில் இருந்து பொதுமக்களை  பாதுகாக்கவும் 200 வார்டுகளிலும் ஒரு வார்டுக்கு இரண்டு சிறப்பு மருத்துவ  முகாம்கள் என மொத்தம் 400 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவிட்டார்.இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கும் விதமாக நேற்று சென்னை, தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் கலந்து கொண்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை