மல்லிகை பூ கிலோ ₹1300க்கு விற்பனை

மதுரை, நவ. 16: மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.1300க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று (நவ.16) முதல் தொடர் முகூர்த்த தினங்கள் காரணமாக பூக்கள் விலை உயர்ந்து வருகிறது.
மதுரை பூ மார்க்கெட்டில் நேற்று மல்லிகை கிலோ ரூ.1300க்கும், முல்லை ரூ.600, பிச்சி ரூ.600, சம்பங்கி ரூ.200, பட்டன்ரோஸ் ரூ.200 என விற்றது. மேலும் செண்டுமல்லி கிலோ ரூ.100, செவ்வந்தி ரூ.120 எனவும், கடந்த வாரத்தை விட சற்று கூடுதல் விலைக்கு விற்றது. இதுகுறித்து பூ வியாபாரி சோ.ராமச்சந்திரன் கூறும்போது, ‘‘தொடர்ந்து முகூர்த்த தினங்கள் மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்கள் விலை உயர்ந்து வருகிறது’’ என்றார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை