மல்லசமுத்திரத்தில் பரவலாக மழை

மல்லசமுத்திரம், செப்.4: மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. மல்லசமுத்திரம் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது. அதே நேரத்தில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.

மழை பெய்தாலும், மறுநாள் அதன் அறிகுறியே தெரியாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று மாலையும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.காய்ந்து வரும் நிலக்கடலை பயிருக்கு இந்த மழையானது உயிரூட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்