மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் கடைகளை திறக்க வேண்டும்: மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை

 

மதுரை, டிச. 9: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் உள்ள கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் கோயில் கடைக்காரர்கள் சங்க நிர்வாகிகள் ராஜநாகுலு, கண்ணன், ஆனந்தகண்ணன் உள்ளிட்டோர் மாநகராட்சி கமிஷனரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், ‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட கோயில் கடைக்காரர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அறநிலைத்துறையின் பரிந்துரையின் கீழ் முன்னுரிமை வழங்கி 2022ம் ஆண்டு ஜன.24ம் தேதி நடைபெற்ற ஏலத்தில் பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் கட்டப்பட்டுள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்களின் தரைத்தளத்தில் 52 கடைகள் பெறுவதற்கு ரூ.6 லட்சம் டெபாசிட் தொகை செலுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி தரப்பில் மல்டி லெவல் கார் பார்க்கிங்கில், புராதன பொருட்களை விற்கும் கடைகளுக்கான கட்டிடப் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த கடைகளை விரைவில் திறந்து வியாபாரத்தை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்லும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். எனவே அவர்களுக்கும், எங்களுக்கும் பயனளிக்கும் வகையில், கடைகளை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை