மலை ரயில் ரத்து செய்யப்பட்டதால் ஊட்டி ரயில் நிலையம் வெறிச்

ஊட்டி:   கொரோனா பரவல் காரணமாக மலை ரயில் சேவை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஊட்டி ரயில் நிலையம் வெறிச்சோடி  காணப்பட்டது. நீலகிரி மலை ரயில் உலக பிரசித்தி பெற்றதாகும். யுனஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்த்து பெற்ற இந்த ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக  ஆர்வம் காட்டுவது வழக்கம்.தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர்  மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து உத்தரவிட்டது. இந்த கட்டுப்பாடுகள் 20ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனைத்  தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்தது. இதனால்,  ஊட்டி – குன்னூர் – மேட்டுபாளையம் மற்றும் குன்னூர் – ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் சேவை நேற்று முதல் ரத்து  செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இதன் காரணமாக ரயில் சேவை ரத்தானது. சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை போன்ற  காரணங்களால் ஊட்டி, லவ்டேல், வெலிங்டன், குன்னூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது….

Related posts

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி