மலையில் சிக்கிய பாபுவால் 5 அதிகாரிகள் ‘பந்தாட்டம்’: கேரள தீயணைப்பு துறை அதிரடி

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம், பாலக்காடு மாவட்டம், மலம்புழா அருகே உள்ள செராடு பகுதியை சேர்ந்தவர்  பாபு (23). 2 வாரங்களுக்கு முன்பு  ஆயிரம் மீட்டர் உயரமுள்ள மலைக்கு  நண்பர்களுடன் சாகச பயணத்திற்கு சென்றார். அப்போது, 600 மீட்டர் உயரத்தில்  சென்றபோது பாபு கால் வழுக்கி மலை இடுக்கில் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து 2  நாளாக அங்கேயே தவித்தார். ராணுவமும், விமானப்படையும் அவரை மீட்டது.இதற்கிடையே, 2 நாட்களாக பாபுவை மீட்க  தீயணைப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. இது  குறித்து விளக்கம் கேட்டு, பாலக்காடு மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரிக்கு  தீயணைப்புத் துறை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பினார். விசாரணைக்கும் உத்தரவிட்டார். இந்நிலையில், பாலக்காடு மாவட்ட  தீயணைப்புத் துறை அதிகாரி ரிதுராஜ் உள்பட தீயணைப்பு படையைச் சேர்ந்த 5 பேர்  அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பாபுவை மீட்க உடனே நடவடிக்கை  எடுக்காததால் இடமாற்றம் செய்யப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது….

Related posts

சட்டீஸ்கரில் நக்சல் கண்ணி வெடியில் சிக்கி 5 போலீசார் காயம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நியமனம்