மலையாள நடிகர் சங்க தேர்தல் 2வது முறையாக தலைவரானார் மோகன்லால்

திருவனந்தபுரம்: மலையாள நடிகர் சங்க தேர்தல் நேற்று கொச்சியில் நடந்தது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தலைவர் பதவிக்கு மோகன்லால், பொதுச்செயலாளர் பதவிக்கு இடைவேளை பாபு, இணை செயலாளர் பதவிக்கு ஜெயசூர்யா, பொருளாளர் பதவிக்கு சித்திக் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரை இப்பதவிகளுக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், மோகன்லால் உள்பட 4 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், 2 துணை தலைவர்கள் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில் துணை தலைவர்களாக மணியன் பிள்ளை ராஜு, நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாக கமிட்டி உறுப்பினர்களாக லால், விஜய் பாபு, பாபுராஜ், மஞ்சு பிள்ளை, லெனா, ரஜனா நாராயணன் குட்டி, சுரபி, சுதீர் கரமனா, டினி டோம், டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன் வெற்றிபெற்றனர்….

Related posts

புதுச்சேரி அரசு மீது டெல்லியில் பாஜக எம்எல்ஏக்கள் புகார்: செய்தியாளர்கள் கேள்விக்கு புதுச்சேரி முதலமைச்சர் மழுப்பல்

ஆந்திராவில் சுரங்கம், கனிமவளத்துறை தொடர்புடைய ஆவணங்களை எரிப்பு: தீவைத்த இருவரில் ஒருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (SCO) தலைமை ஏற்க சீனாவுக்கு இந்தியா ஆதரவு