மலைகாய்கறி தோட்டங்களுக்கு ஸ்பிரிங்ளர் மூலம் நீர் தெளிப்பு

கோத்தகிரி : கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு அதிக அளவு பனிப்பொழிவு காணப்படுவதால் மலைப்பயிர்கள் பயிரிட்ட விவசாயிகள் ஸ்பிரிங்களர் நீர் தெளிக்கப்பட்டும் மலைப்பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைதொழிலுக்கு அடுத்தப்படியாக மலை காய்கறிகளான முட்டை கோஸ், பீன்ஸ்,உருளைக்கிழங்கு,பீட்ரூட்,காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூக்கல்தொரை,கேர்க்கம்பை, ஈளாடா,கோடநாடு, கீழ் கோத்தகிரி,பில்லிக்கம்பை,கட்டபெட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் இப்பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ள மலைக்காயாகறிகள் பனிப்பொழிவின் காரணமாக நீர்வரத்து குறைவதால் பயிர்கள் கருகாமல் பாதுகாக்க தற்போது விவசாயிகள் மூலம் ஸ்பிரிங்ளர் (நீர் தெளிப்பான் கருவிகள்) மூலம் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில்  நீர் பாய்ச்சப்பட்டு பாதுகாக்கப்படுவதோடு,விளைச்சலுக்கு ஏற்றவாறு நீர் தெளிக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் பனிப்பொழிவில் இருந்து மலைப்பயிர்கள் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் தரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்….

Related posts

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

தமிழகத்தில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தேனி அரசு சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடம் யாரால் தேர்வு செய்யப்பட்டது: ஐகோர்ட் கேள்வி