மலர்களே இல்லாத தாவரவியல் பூங்காவில் பால்சம் மலர் கண்களுக்கு விருந்து

 

ஊட்டி, ஜன.28: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பால்சம் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. கோடை சீசனான மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக தற்போது தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, பூங்காவில் தற்போது நாற்று நடவு பணிகள் நடந்து வருகின்றன. மேலும், பல ஆயிரம் தொட்டிகள் தயார் செய்யும் பணிகளும் தற்போது நடந்து வருகிறது.

புல் மைதானங்களும் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. தற்போது பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மட்டுமே மலர்கள் காணப்படுகிறது. கண்ணாடி மாளிகையில் தற்போது பால்சம் மலர்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. பால்சம் மலர் தொட்டிகள் மற்றும் சைக்ளோமன் மலர் தொட்டிகள் கொண்டு கண்ணாடி மாளிகையில் உள்ள மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் மலர்களே இல்லாத நிலையில், இந்த மலர் அலங்காரம் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்