மலபார் கோல்டு டைமண்ட்ஸில் இந்தியாவிலேயே குறைந்த விலையில் தங்கம் விற்பனை

சென்னை: மலபார் கோல்டு  டைமண்ட்ஸ் `ஒன் இந்தியா, ஒன் கோல்டு’ என்ற பெயரில் நாட்டிலேயே மிக குறைந்த விலையில் தங்கத்தை வழங்கி வருவதால், நாடு முழுவதிலும் உள்ள தங்க நுகர்வோர்கள் கடந்த சில நாட்களாக மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த முன்னணி குழுமத்தால் 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த முன் முயற்சி, வெவ்வேறு விலைகளில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தங்கத்தை விற்கும் தொழில் நடைமுறையை நீக்குகிறது. தங்கத்தின் மிக குறைந்த விலையானது வாடிக்கையாளர்களுக்கு இருமுறைகளில் நன்மையளிக்கிறது. ஏனெனில் அவர்கள் குறைந்த விலையில் தங்கம் வாங்குவதோடு மட்டுமல்லாமல், தங்கத்தின் விலையின் சதவீதமாக நிர்ணயிக்கப்படும். சேதாரம் குறைவாக இருப்பதாலும் நன்மை அடைவார்கள்.தயாரிப்புகளின் வெளிப்படையான மற்றும் நியாயமான விலையை அனுமதிக்கும் நியாயமான விலை கொள்கையை  கடைபிடிப்பதால், இந்த பிராண்டால் விலைக்கேற்ற நன்மையை வழங்க முடியும். வெறும் 3.9% முதல் சேதாரம்  தொடங்குவதோடு மட்டுமல்லாமல், மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நாடு முழுவதும் தங்கத்திற்கு ஒரே விலையை வசூலிக்கிறது. இதுகுறித்து மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி அகமது பேசியதாவது, `நாட்டில் முதலீடு மற்றும் செல்வத்திற்கு பாதுகாப்பான கருவியாக தங்கம் தொடர்கிறது. ஒவ்வொரு வாடிக்கையாளரின் இருப்பிடத்தை பொருட்படுத்தாமல் சிறந்த விலையை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்’ என கூறினார்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்