மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலி: அதிகாரிகள் விசாரணை

தண்டராம்பட்டு, டிச.27: தண்டராம்பட்டு அருகே மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டராம்பட்டு அடுத்த கிழ்பாச்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை(55). விவசாயியான இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அண்ணாமலை தனக்கு சொந்தமான 12 ஆடுகளை கொட்டகையில் கட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். வழக்கம் போல் நேற்று காலை ஆட்டு கொட்டகைக்கு சென்று பார்த்தபோது அதில் 9 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது. வயிறு, கழுத்து பகுதிகளில் காயத்துடன் இறந்து கிடந்த ஆடுகள் குறித்து அண்ணாமலை கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷிக்கு தகவல் அளித்தார்.

அதனடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர். தொடர்ந்து, கால்நடை மருத்துவர்கள் மூலம் உயிரிழந்த ஆடுகளை மீட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆடுகளை கடித்த மர்ம விலங்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

திருவாடானை அருகே புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணி ஸ்பீடு

செப்.11ல் மக்கள் தொடர்பு முகாம்