மருமகன், உறவினர்கள் வீடுகளில் சோதனை பஞ்சாப் முதல்வர் நேர்மையற்ற மனிதர்: அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு

புதுடெல்லி: பஞ்சாப் முதல்வரின் மருமகன் மற்றும் உறவினர்கள் வீட்டில் அமலாக்க துறை நடத்திய சோதனையை தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் நேர்மையற்ற மனிதர் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த மாதம் 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான வியூகங்களை அனைத்து கட்சிகளும் வகுத்து வருகிறது. இம்மாநிலத்தில் சில நிறுவனங்களும், தனி நபர்களும் சட்ட விரோத மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக 2018ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் என்று கூறப்படும் பூபிந்தர் சிங் ஹனியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், பஞ்சாப்பில் சண்டிகர், மொகாலி உள்பட ஹனிக்கு சொந்தமான 12 இடங்களில் உள்ள அலுவலகம், வீடுகளில் அமலாக்க துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக 2 நாட்கள் சோதனை நடத்தினர். இதில், பஞ்சாப் முதல்வரின் மருமகன் பூபிந்தர் சிங் ஹனி வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து ரூ.10 கோடிக்கும் அதிகமான ரொக்கம், 21 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவற்றை அமலாக்க துறை கைப்பற்றியது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், இந்த விவகாரம் ெதாடர்பாக கூறுகையில், சன்னி ஒரு “பொதுவானவர்” அல்ல, மாறாக “நேர்மையற்ற” மனிதர் என்றார். …

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்