மருத்துவ முதுநிலை நீட் தேர்வு மே 21-க்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓபிசி.க்கு 27 சதவீதம் வழங்குவதை சமீபத்தில் உறுதி செய்தது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை இந்தாண்டுக்கு மட்டும் அனுமதித்தது. இந்நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘2022ம் ஆண்டுக்கான மருத்துவ முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்கும்படி மருத்துவர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். அதனால், மார்ச் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த இத்தேர்வு 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இத்தேர்வு நடைபெறும் அதே தேதியில் முதுநிலை நீட் 2021-க்கான கலந்தாய்வு நடத்தப்பட இருப்பதே, ஒத்திவைப்புக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தேர்வு ேம 21ம் ேததி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்