மரத்திலேயே கருகும் பப்பாளி

அரூர், மார்ச் 29: தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவ மழை முற்றிலும் பொய்த்துவிட்டது. இதனால் மொரப்பூர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, கிணறுகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் செடிகளிலேயே தக்காளி, பப்பாளி ஆகியவை கருகி காணப்படுகிறது. இருக்கும் தண்ணீர் கால்நடைகளுக்கும், இதர அத்தியாவசிய தேவைகளுக்கு போதுமானதாக உள்ளதால் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை. எனவே தண்ணீர் இல்லாமல் பப்பாளி மரங்கள் காயந்து காணப்படுகிறது. இதில் காய்த்திருக்கும் காய்களும் கருக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பருவ மழை முற்றிலும் பொய்த்து விட்டதால், விவசாயிகள் அனைத்து வகையான பயிர்களிலும் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். எனவே வேளாண் அதிகாரிகள் வறட்சியை கணக்கிட்டு, அரசின் உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி