மரக்காணம் அருகே சீட்டு கம்பெனியில் 2 மடங்கு பணம் தருவதாக கூறி ₹7 கோடி ேமாசடி

விழுப்புரம், ஜூன் 16: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வேப்பேரி கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் நேற்று விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், எங்கள் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகியோர் இணைந்து பியூட்டி பார்லர் வைப்பதற்காகவும், இடம் வாங்குவதற்காகவும் எங்களிடத்தில் பணம் கேட்டனர். நகைகளை அடமானம் வைத்தும், சீட்டு பணம் எடுத்தும் கடந்த 2022ம் வருடம் ஜூலை மாதம் ரூ.3 லட்சம் கடனாக கொடுத்தோம். கடந்த ஜனவரி மாதம் வள்ளி மற்றும் அவரது கணவர் காளிதாஸ் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் தருவதாக கூறினார்கள். தற்போது பணத்தை கேட்டால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக இருவர்களும் ஊரை விட்டு தலைமறைவாக உள்ளனர். அவரது சீட்டு கம்பெனியில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 2 மடங்கு திருப்பிதரப்படும் என்று கூறியதை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் சீட்டில் சேர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இத்தம்பதி ரூ.7 கோடி வரை பணமோசடி செய்துவிட்டு சென்றுள்ளனர். எனவே அவர்களை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தர வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்