மயிலாடுதுறை மாமரத்துமேடை திரவுபதி அம்மன் கோயிலில் ஆடி உற்சவ தீமிதி திருவிழா

 

மயிலாடுதுறை, ஜூலை 31: மயிலாடுதுறை மாமரத்துமேடை திரவுபதி அம்மன் கோயிலில் ஆடி உறசவ தீமிதி திருவிழா நடந்தது. இதில் ஏராளமானோர் நேர்த்திகடன் செலுத்தினர். மயிலாடுதுறை அடுத்த கூறைநாடு மாமரத்துமேடையில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் 18ம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா கணபதி ஹோமத்துடன் கடந்த 21ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து திரவுபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம், அரவான் பலியிடுதல் நிகழ்ச்சி நடந்தது.

தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பிரகார வீதியுலா நடந்தது. 9ம் நாள் நிகழ்வாக தீமிதி திருவிழா நேற்றிரவு நடந்தது. இதையொட்டி காவிரி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின்னர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் சுவாமி வீதியுலா நடந்தது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி