மயிலாடுதுறை எஸ்பி மீனா அறிவுரை ஒன்றிய அரசை கண்டித்து கட்டிட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், பிப்.13: ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்களை வாபஸ் பெற கோரி தமிழ் மாநில கட்டிடத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். கல்வி உதவித்தொகை ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற பாகுபாடு இன்றி சமமாக வழங்க வேண்டும். இயற்கை மரண நிவாரணத்தை ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நல வாரிய கணினி சர்வரில் பதிவு புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் அளிப்பதில் உள்ள சிரமத்தை சரி செய்ய வேண்டும். பெண் உறுப்பினர்களின் ஓய்வூதிய வயதை 50ஆக குறைக்க வேண்டும். திருமண உதவித்தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணம் மற்றும் இஎஸ்ஐ மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு