மயிலாடுதுறை அருகே 82 வயது முதியவர் 25வது பட்டப்படிப்புக்கு விண்ணப்பம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கதிராமங்கலத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி (82). பாலிடெக்னிக் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அரசு பணியில் இருக்கும் போதே 1964ம் ஆண்டு முதல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேர, அஞ்சல் வழி பட்டய வகுப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி படிப்புகள் படித்து வருகிறார்.திருமணமாக வில்லை. இதுவரை பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்டி என  24 பட்டங்களை பெற்றுள்ளார். ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டய படிப்புகளும், ஓய்வு பெற்றதற்கு பிறகு 12 பட்டயப் படிப்புகளும் படித்து முடித்துள்ளார்.இந்நிலையில் 25வது பட்டப்படிப்பாக எம்.ஏ போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பதற்காக முடிவு செய்த குருமூர்த்தி, மயிலாடுதுறையில் cs;s தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மையத்தில் விண்ணப்பித்து இருந்தார். பல்கலைக்கழகத்தில் அதற்கான பாடப் புத்தகங்களை நேற்று பெற்றுக்கொண்டார். 82 வயதில் 25வது பட்ட படிப்பிற்கு விண்ணப்பம் செய்த குருமூர்த்திக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.இதுகுறித்து குருமூர்த்தி கூறுகையில், தனது அறிவை வளர்த்து கொள்ளும் விதமாக இந்த படிப்புகள் அமைந்துள்ளது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ள இளைய தலைமுறையினர் அதற்கான நேரத்தை வீணடிக்கின்றனர். இளைய தலைமுறையினர் வாழ்க்கையை அர்த்தத்துடன் வாழ வேண்டும் என்று தெரிவித்தார்….

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்