மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் அமுது படையல் விழா

மயிலாடுதுறை, மே10: மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தலில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் அமுது படையல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி உத்தராபதீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதைதொடர்ந்து சுவாமி பாதத்தில் அமுது படையல் வைத்து படைக்கப்பட்டது. விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அமுது படையலிட்ட உணவை வாங்கி சாப்பிட்டனர். இதேபோல் மயிலாடுதுறை புதுத்தெரு ருத்ராபதி கோயிலில் அமுது படையல் விழா நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சுவாமிக்கு ஆராதனை செய்தனர். பின்னர் அமுது படையல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை