மயிலாடுதுறையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

 

மயிலாடுதுறை, ஜூன் 15: மயிலாடுதுறையில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற மாநில துணைத்தலைவர் அசோக்குமார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் திருமுருகன், அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் இளவரசன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசு ஆணையின்படி கட்டணமில்லா சிகிச்சையை வழங்கிட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் IFHRMS முறையில் மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் நடைமுறையை முற்றிலுமாக கைவிட்டு, பழைய முறைப்படி ஆசிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வருமான வரி செலுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் மாவட்ட பொருளாளர் மதிவதனி நன்றி கூறினார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்