மயங்கி விழுந்து விவசாயி சாவு

தர்மபுரி, மே 15: தர்மபுரி செட்டிக்கரை மாதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாது (59), விவசாயி. இவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் திடீரென மாது மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்