மம்மூட்டி மன்னிப்பு

சென்னை: பிரபல மலையாள டைரக்டர் ஜூட் ஆண்டனி. இவர் நிவின் பாலி, நஸ்ரியா நடித்த ‘ஓம் சாந்தி ஓசானா’ மற்றும் ‘ஒரு முத்தாஸி கதா’, ‘சாராஸ்’ உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார். தற்போது ‘2018’ என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி உள்ளார். இதில் டோவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், அபர்ணா பாலமுரளி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மம்மூட்டி பங்கேற்று பேசும்போது, ‘டைரக்டர் ஜூட் ஆண்டனி தலையில் முடி இல்லா விட்டாலும் அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டிரெய்லர் சிறப்பாக உள்ளது’ என்றார். இதற்கு வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு மூத்த நடிகர், டைரக்டரை உருவக்கேலி செய்து பேசுவதா? என்று பலரும் கண்டித்தனர். இதையடுத்து மம்முட்டி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘டைரக்டர் ஜூட் ஆண்டனியை பாராட்டும்போது பேசிய வார்த்தைகளால் சிலர் புண்பட்டு இருப்பதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை