மன்னார்புரம் பாலத்தில் தார்ச்சாலை பணிகள் துறையூர் பகுதியில் சிவாலயங்களில் சோமவார பிரதோஷ வழிபாடு

துறையூர், ஏப். 4: துறையூர் பகுதியில் சிவாலயங்களில் சோம வார பிரதோஷ வழிபாடு நேற்று நடைபெற்றது.துறையூர் ஆத்தூர் சாலையிலுள்ள ஸ்ரீ நந்திகேஸ்வரர் உடனுறை சம்பத்கவுரி கோயில், ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில், நல்லியம்பாளையம் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் மற்றும் முருகூர், கொப்பம்பட்டி, கீரம்பூர், ரெட்டியாப்பட்டி உள்ளிட்ட கிராமப் புறங்களிலும் உள்ள சிவாலயங்களிலும் சோம வாரப் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கம், நந்தியம்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பொதுமக்கள் மலர்கள், வில்வ இலைகள் சாற்றி சிவனை வழிபட்டனர். பிரதோஷ பூஜை நிறைவடைந்ததம் சிவ பக்தர்கள் தேவாரம் திருமுறைகள் பாடி ரிஷப வாகனத்தில் சிவன், அம்பாள் உற்சவ மூர்த்திகளை அலங்கரித்து எடுத்துச் சென்று கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்