மன்னார்குடி நகர காவல் நிலையம் சார்பில் கஞ்சா, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

மன்னார்குடி: தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை முற் றிலுமாக ஒழிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் மாநிலம் முழு வதும் கஞ்சா வேட்டை என்ற பெயரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, போதை பொருட்களை பறிமுதல் செய்தும், கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 30ம் தேதி முதல் கஞ்சா வேட்டை 4. 0 வை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு துவக்கி வைத்துள்ளார். மேலும், கஞ்சா உள் ளிட்ட போதை பொருட்கள் பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பா ளர்கள் மற்றும் காவல் ஆணையர் களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழக முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபடுமாறு போலீசாருக்கு அறிவுறுத்தி யுள்ளார்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் அறிவுறுத்தலின் பேரில் கஞ்சா 4. 0 வேட்டை மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களில் போலீ சார் மாவட்ட முழுவதும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பகு தியாக, மன்னார்குடி நகர காவல் நிலையம் சார்பில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் மன்னார் குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.

தமிழ்த் துறை உதவி பேராசிரியர் சிவக் குமார், எஸ்எஸ்ஐ உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா கலந்து கொண்டு போதைப் பொருட் களைபொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதை மாற்றம் தீமைகள் எதிர்த்து போராட வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசுகை யில், மனித சமூகம் சந்திக்கும் மிக முக்கிய பிரசனையாக போதை பொருள் பயன்பாடு உருவெடுத்துள்ளது. போதை பொருட்கள் தனி நபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன், சமூகத்திற்கும் பெரும் ஆபத்தை விளை விக்கின்றன. போதை பொருட்களுக்கு அடிமையாகும் மாணவன் முதலில் தனது அறிவை இழக்கிறான். இதனால் உடல் நலத்தை கெடுத்து கொள்கிறான்.

அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற ஆவலில் மாணவர்கள் போதை பொருட்களை உப யோக படுத்துவதன் மூலம் தனது அழிவிற்கு அவனே காரணமாகிவிடுகிறான். எனவே, மாணவர் சமூகம் தம்மை கெடுக்கக்கூடிய போதை பழக்கத்திலிருந்து விடுபட விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார். முடிவில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக மா ணவ மாணவியர் உறுதிமொழி ஏற்று கொண்டனர். முன்னதாக, முதல் நிலை காவலர் சுரேஷ் வரவேற்றார், காவலர் ராம் பிரவீன் நன்றி கூறினார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு