மன்னார்குடி சேரன்குளம் வெங்கடாலஜலபதி பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா

மன்னார்குடி: சேரன்குளம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் தெப்ப திருவிழா நடை பெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சேரன்குளம் வெங்கடாஜல பதி பெருமாள் கோயிலில் தை மாதத்தில் மகம் நட்சத்திரம் தினத்தன்று தெ ப்ப திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு தெப்ப திருவிழா நடைபெற்றது. கோயிலில் இருந்து பூமி, நீலா தாயார் கள் சமேதராக புறப்பட்ட சீனிவாச பெருமாள் சேரன்குளம் முக்கிய வீதிகளில் உலா வந்தார். அதனைத் தொடர்ந்து, கோயிலின் பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் கட்டப் பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தரு ளினார். பெருமாளுக்கு விசேஷ தீபாரா தனைகள் நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது. பின்னர், வார வேடிக்கைகள் முழங்க தெப்போற்சவம் நடைபெற்றது.

 

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்