மனைவியை பிரிந்தவர் தற்கொலை

 

கோவை, ஜூலை 21: கோவை செல்வபுரம் அமுல் நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (45). கூலி தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வசித்து வந்தார். கடந்த 5 ஆண்டாக இவர் மனைவியுடன் வாழாமல் தனிமையில் இருந்துள்ளார். 5க்கும் மேற்பட்ட முறை இவர் விரக்தியில் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் இவர் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றப்பட்டார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் பிளீச்சிங் பவுடர் கரைத்து குடித்து இறந்தார். இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தூய்மை பணியாளர் வாய்க்காலில் விழுந்து பலி

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்

குடிக்க பணம் தராததால் தாய், தந்தைக்கு வெட்டு மகன் கைது