மனு கொடுக்கும் போராட்டம்

ராஜபாளையம், ஜூலை 10: ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் 4 மாதங்களுக்கு மேலாக பணி வழங்காததை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.  விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வரதராஜன், சிபிஐ ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய ஊராட்சித் தலைவர் விவேகானந்தன், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்ககோரி 2 மாதங்களுக்கு முன்னரே ஊராட்சி சார்பில் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மற்றும் வட்டாட்சியர்கள் நிதி மற்றும் புதிதாக கண்மாய் தோண்டும் பணிக்கான இடத்தினை தேர்வு செய்தவுடன் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related posts

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னை மாவட்டத்தில் புதிதாக 4,644 குடியிருப்புகள் கட்டப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

போதை பொருள் விற்பனை செய்த வாலிபருக்கு 12 ஆண்டு கடுங்காவல் சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்த சோதனைகளில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்: 1200 இ-சிகரெட்டுகளும் பிடிபட்டன