மனித குலத்திற்கு கேடு விளைவிக்கும் ஈயம் கலந்த பெட்ரோலின் சகாப்தம் முடிந்ததாக ஐ.நா.அறிவிப்பு; 20 ஆண்டுகால பிரச்சாரங்களுக்கு வெற்றி என பெருமிதம்!!

நியூயார்க் : மனித குலத்திற்கு கேடு விளைவிக்கும் ஈயம் கலந்த பெட்ரோலின் சகாப்தம் முடிந்துவிட்டதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுசூழல் அமைப்பு அறிவித்துள்ளது. உடல் நலத்திற்கு கேடுகளை விளைவிக்கும் ஈயம் 1928ம் ஆண்டு முதல் பெட்ரோலில் கலந்து விற்பனை செய்யப்பட்டது.இது சுற்றுசூழல் மற்றும் பொது சுகாதார கட்டமைப்புக்கான பேரழிவு என்று கூறிய ஐ.நா.நிபுணர்கள், ஈயம் கலந்த பெட்ரோலை பயன்படுத்ததை தவிர்க்க வலியுறுத்தினர்.1970களில் உலகம் முழுவதும் ஈயம் கலந்த பெட்ரோல் பயன்பாட்டில் இருந்தது. அதில் இருந்து வெளியேறும் நச்சுத்தண்மை மனித இனத்திற்கே ஆபத்தானது என்று உறுதியானதால் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் ஈயம் கலந்த பெட்ரோலுக்கு தடைவிதிக்க தொடங்கினர்.2000ம் ஆண்டு 86 நாடுகளில் ஈயம் கலந்த பெட்ரோல் பயன்பாட்டில் இருந்ததை உறுதி செய்த ஐ.நா.சுற்றுசூழல் அமைப்பு, இதற்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுத்தது.20 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்களின் பலனாக ஈயம் கலந்த பெட்ரோலை பயன்படுத்தி வந்த கடைசி நாடான அல்ஜீரியாவும் இறுதியாக தற்போது விற்பனையை நிறுத்தியுள்ளது.ஈயக்கலவை உடலினுள் செல்வதால் பக்கவாதம், இருதய நோய், புற்று நோய் ஆகியவை ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.ஈயம் கலந்த பெட்ரோலின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதால் ஆண்டிற்கு 12 லட்சம் உயிரிழப்புகள் குறையும் என்று ஐ.நா. நம்பிக்கை தெரிவித்துள்ளது.ஆனாலும் வீட்டு உபயோகப் பொருட்களில் ஈயத்தின் பயன்பாட்டை குறைக்கவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறவும் உலக நாடுகளுக்கு ஐ.நா.பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்….

Related posts

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு..!!