மனத்தூய்மை, உடல் ஆரோக்கியம் பெற தியான யோகா அவசியம்

ஈரோடு, ஜூன் 19: ஈரோடு சென்னிமலை சாலை தொட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷன் அருகே அமைந்துள்ள ஞானகுரு தபோவனத்தில் 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு தியான யோகா பயிற்சி, துருவ தியானம், கூட்டு தியானம் நடைபெற்றது. இதில், ஞானகுரு தபோவனம் நிறுவனர் தமிழ்வேல் சுவாமிகள் அருள்ஞான சொற்பொழிவாற்றினார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘ஒவ்வொரு குழந்தைகளும் தாய், தந்தையை முதலில் மதிக்க வேண்டும். இல்லையென்றால் எத்தகைய தியானங்கள் செய்தாலும், ஆன்மீக பணிகள் மேற்கொண்டாலும் பலன் அளிக்காது, அது மன வேதனையை ஏற்படுத்தும். இது நம் பின்வரும் குழந்தைகளுக்கு சாப அலைகளாக வந்து சேர்ந்து விடும். எனவே, தாய், தந்தையை எப்படி மதிப்பது, பெற்றோர்கள் குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாக, மகிழ்ச்சியாக அமைய தாய், தந்தையர் எவ்வாறு செயல்பட வேண்டும்.

தியான யோகா பயிற்சிகள் மூலம் நம் உயிரை பலப்படுத்த வேண்டும். நாம் மரத்தின் இலைகளுக்கு தண்ணீர் ஊற்றுவதில்லை. ஆனால் நிலத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள வேர் பகுதிக்கு நீர் ஊற்றுகின்றோம். மரம் அற்புதமாக வளர்கிறது.‌ அதுபோல நம் உடலுக்குள் இருக்கும் உயிரே வேராக இருக்கின்றது. நாம் தியான யோகா பயிற்சிகள் மூலம் உயிரை பலப்படுத்தும்போது, நமது உடல் ஆரோக்கியத்துடன் வாழ மகிழ்வான வாழ்க்கை வாழ முடியும். மனத்தூய்மையே உடல் ஆரோக்கியம்’’ என்றார். சிறப்பு விருந்தினர்களாக ஆப்பிள் கிட்ஸ் எஜுகேஷன் பி.லிட், அமேசான் அகாடமிக் பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏ.எல்.தெய்வநாதன், கனவு ஸ்டார்ட் அப் வில்லேஜ் முதன்மை நிர்வாக இயக்குநர் கார்த்தி ஈஸ்வரமூர்த்தி, பள்ளிக்குழந்தைகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு