மநீம 42 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் கமல்: மயிலாப்பூரில் நடிகை ஸ்ரீபிரியா; தி.நகரில் பழ.கருப்பையா

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் 2வது வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். இதில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி.நகர் தொகுதியில் பழ.கருப்பையாவும், மயிலாப்பூர் தொகுதியில் நடிகை பிரியாவும் போட்டியிடுகிறார்கள். ஏற்கனவே 70 வேட்பாளர்களை மநீம அறிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று மேலும் 42 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அந்த வேட்பாளர்கள் விவரம்:எஸ்.டி.மோகன்-திருவொற்றியூர். சரத்பாபு-ஆலந்தூர். தேசிங்குராஜன்-பொன்னேரி. தணிகவேல்-திருவள்ளூர். உதயகுமார்-ஆவடி. வைத்தீஸ்வரன்-அம்பத்தூர். ராஜீவ்-சோழிங்கநல்லூர். எம்.ஆதம் பாட்ஷா-ராணிப்பேட்டை. விக்ரம் சக்கரவர்த்தி-வேலூர். முருகேஷ்-ஊத்தங்கரை. ரவிசங்கர்-கிருஷ்ணகிரி. ஜெயவெங்கடேஷ்-தருமபுரி. சீனிவாசன்-பாப்பிரெட்டிபட்டி. பதி-செஞ்சி. அன்பின் பொய்யாமொழி-வானூர். தாசப்ப ராஜ் – எடப்பாடி. தியாகராஜன்-சேலம் மேற்கு. குரு சக்கரவர்த்தி-சேலம் வடக்கு. மணிகண்டன்-சேலம் தெற்கு. நடராஜ்-பரமத்திவேலூர். சதாநந்தம்-பவானி. பிரகாஷ்-கோபிசெட்டிப்பாளையம். சுரபி பங்கஜ் ராஜ்- கவுண்டன்பாளையம். நிதி-தொண்டாமுத்தூர். சதீஷ்குமார்-பொள்ளாச்சி. மூகாம்பிகா-உடுமலைப்பேட்டை. சாம்சன்-மணச்சநல்லூர். சுந்தர மோகன்-தஞ்சாவூர். முத்துக்கிருஷ்ணன்-மதுரை கிழக்கு. அழகர்-மதுரை வடக்கு. மணி-மதுரை மத்தி. பரணிராஜன்-திருப்பரங்குன்றம். சத்யராஜ்-திருவாடனை. சேகர்-வைகுண்டம். பிரேம்நாத்-பாளையங்கோட்டை. சந்தோஷ்பாபு-வேளச்சேரி. ஹரன்பாலா-வில்லிவாக்கம். தங்கவேலு-கோவை வடக்கு. மகேந்திரன்-சிங்காநல்லூர். கோவை தெற்கு – கமல்ஹாசன். தி.நகர்-பழ.கருப்பையா. மயிலாப்பூர்-பிரியா.கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் டாக்டர் சுபா.சார்லஸ் போட்டியிடுகிறார்.பின்னர் நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது: தமிழ் மக்கள் எனக்கு தந்திருக்கும் அன்பு, செல்வாக்கு, புகழ், பணம் இவை எனக்கு 2 ஜென்மத்திற்கு போதுமானது. அவர்களுக்கு மாற்று அரசியலை கொடுப்பது எனது கடமை. லஞ்ச ஊழல் அரசியல் வளர்ந்திருந்தாலும் பெரிய மாற்றத்தை ேநர்மையாளர்கள்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் முதலில் எள்ளி நகையாளவும் பட்டிருக்கிறார்கள். காந்தி, கலாம் முதல் கமல் வரை நேர்மையாளர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

டெல்லி புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள்